யார் ஆண்டால் என்ன? இப்படி சொல்வது சரியா?
UPDATED : நவ 06, 2012 | ADDED : நவ 06, 2012
'ராமன் ஆண்டால் என்ன? ராவணன் ஆண்டால் என்ன?'' என்று சொல்வதைக் கேள்விப் பட்டிருப்பீர்கள். ராமாயணத்திலேயே இதற்கான நிகழ்ச்சி நடந்திருக்கிறது. சுக்ரீவன் தலைமையில் வானர வீரர்கள் ராவணனின் படைபலத்தைக் கண்டதும் தலைதெறித்து பின்வாங்கி ஓடுகின்றனர். இதைக்கண்ட அனுமன் திகைத்துப்போனார். வானர வீரர்களை அவர் பின்தொடர்ந்தார். அப்போது அவர்கள், ''இந்த நாட்டை ராமன் ஆண்டால் என்ன! ராவணன் ஆண்டால் நமக்கென்ன? நாம் ஏன் இவர்கள் இருவருக்கும் இடையில் சிக்கி போரில் ஈடுபட வேண்டும்?'' என்று பேசிக் கொண்டனர். இதையறிந்த ராமன் அனுமனிடம், வானரக்கூட்டத்தை ஒன்று திரட்டி அவர்களின் பயத்தைப் போக்கும்படி கூறினார்.