யார் இந்த உபேந்திரன்
UPDATED : பிப் 13, 2021 | ADDED : பிப் 13, 2021
காஸ்யபர், அதிதி தம்பதிக்கு இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் பிள்ளைகளாக இருந்தனர். இத்தம்பதி மகாவிஷ்ணுவை பிள்ளையாக அடைய விரும்பி தவத்தில் ஈடுபட்டனர். அதை ஏற்ற மகாவிஷ்ணு, ஆவணி வளர்பிறை துவாதசியும், திருவோணமும் இணையும் நாளில் வாமன மூர்த்தியாக அவதரித்தார். வாமனரைக் கண்ட அதிதி, 'சிரவண மங்களா' (ஓண நாளில் மங்களமாக வந்தவனே) என்று சொல்லி மகிழ்ந்தாள். இந்திரனின் தாய் வயிற்றில் பிறந்ததால், வாமனருக்கு 'உபேந்திரன்' என்றும் பெயருண்டு. இதற்கு 'இந்திரனுக்கு பின் வந்தவன்' அதாவது 'இந்திரனின் தம்பி' என்பது பொருள்.