உள்ளூர் செய்திகள்

போற்றி பாடும் போது "ஓம் என்பது ஏன்?

108 போற்றி, 1008 போற்றி சொல்லும்போது, சுவாமியின் பெயரின் முன்னால் 'ஓம்' சேர்க்கிறோம். முடியும் இடத்தில் 'போற்றி' என்கிறோம். உதாரணத்துக்கு 'ஓம் முருகா போற்றி'. 'ஓம்' என்னும் மந்திரத்திற்கு பல விளக்கங்கள் உள்ளன. அதில் ஒன்றைக் கேளுங்கள். ''ஆதிபகவானாகிய இறைவனே! ஜீவனாகிய என்னை சேர்த்துக்கொள்,'' என்பது இதன் பொருள். ஒவ்வொரு தடவையும் 'ஓம்' என்று சொன்ன பிறகு, விஷ்ணுவே, சிவனே, சக்தியே, விநாயகா, ஐயப்பா, முருகா என்றெல்லாம் அவரவர் இஷ்டதெய்வத்தை அழைக்கிறோம். ஓம் முருகா, ஓம் விநாயகா, ஓம் விஷ்ணு, ஓம் சிவாயநம என்று சொல்லும் போது, அந்தந்த தெய்வங்களிடம் 'என்னை உன்னோடு சேர்த்துக்கொள்' என்று பொருள் தெரிந்தோ, தெரியாமலோ கெஞ்சுகிறோம். காலம் வரும்போது, இந்த மந்திரம் சொன்னதற்குரிய பலன் உறுதியாகக் கிடைக்கும். பிறப்பற்ற நிலையும் பரமானந்தமும் ஏற்படும்.