எமனை விடக் கொடியவர்
UPDATED : ஏப் 02, 2021 | ADDED : ஏப் 02, 2021
படித்தவராக இருந்தாலும் ஆன்மிக சிந்தனை இல்லாதவரை மூடன் என்கிறார் திருமூலர். பக்தரைப் போல் நடிப்பவர்கள் மூடர்கள். இப்படிப்பட்டவர்கள் ஆட்சி நடத்தினால் நாடு சீர்குலையும். வன்முறை தலைவிரித்தாடும். நல்லவர்கள் கொடுமைப்படுத்தப்படுவர். உயிரைப் பறிக்கும் எமன் கூட நல்லவர்களை துன்புறுத்த மாட்டான். ஆனால் மூடத்தனம் கொண்ட ஆட்சியாளர்கள் எமனை விடக் கொடியவர்களாக இருப்பர்.