உள்ளூர் செய்திகள்

விதியை வெல்ல முடியும்

* தெய்வம் நமக்குள் வந்து எப்போதும் அருளைப் பொழிந்து கொண்டிருக்கும் விதத்தில், மனதை திறந்து வைத்திருங்கள். * எல்லாம் அளிக்கும் இறைவன் நம்மையும் காப்பான் என்று சொல்லுங்கள். எல்லாத் துயரங்களும் நம்மை விட்டு ஓடிவிடும்.* அன்பு என்பது கொள்கை அளவில் இருந்து பயனில்லை. செய்கையாக மாறினால் தான் நன்மை உண்டாகும்.* பூச்சி, நோய் இவற்றால் மனிதர்கள் சாவதில்லை. பயம், கவலை இவையே மனிதனைப் பெரிதும் ஆட்டிப் படைக்கின்றன. அச்சத்தை வேரோடு சாயுங்கள்.* பரோபகாரம் இல்லாத இடத்தில் தெய்வபக்தி என்பது வெளிவேஷம் மட்டும் தான். பிறருக்கு நம்மால் இயன்ற உதவிகளைச் செய்ய முயல வேண்டும்.* விதியின் முடிவுகளை வெல்லும் சக்தி தெய்வபக்திக்கு உண்டு. இந்த உலகம் முழுமைக்கும் தலைவனான ஈசன் பக்தர்களின் வசப்பட்டவன். * தர்மத்தாலும், கருணையாலும் பெறப்படும் வெற்றி என்றென்றும் உலகில் நிலைத்திருக்கும்.- பாரதியார்