துணிவே நமக்கு துணை
UPDATED : மே 07, 2014 | ADDED : மே 07, 2014
* தைரியம் மிக்கவனைத் தீரன் என்று போற்றுவர். தீரன் என்பதற்கு துணிவு உள்ளவன் என்பதோடு அறிவுள்ளவன் என்றும் பொருளுண்டு. * கோழை ஒருவன் என்ன கற்றிருந்தாலும் பயனில்லை. அவனை யாரும் நம்பக் கூட மாட்டார்கள். * அச்சம் இருக்கும்வரை ஒருவனை அறிவாளி என்று சொல்ல முடியாது. அவன் படித்திருந்தாலும் முட்டாள் தான்.* ஆபத்திலும் உள்ளம் நடுங்காமல் துணிவுடன் அதை எதிர்கொள்ள நிற்பவனே உண்மையான ஞானி. - பாரதியார்