உள்ளூர் செய்திகள்

தர்மமே வெற்றி கொள்ளும்

* எல்லாவிதமான செல்வங்களுக்கும் அறிவு தான் வேர்.* அச்சம் இருக்கும் வரையில் அறிவாளியாக முடியாது.* மலர்ந்த முகம், இனிய சொல், தெளிந்த உள்ளம் எப்போதும் இருக்க வேண்டும்.* தர்மத்தை சூது ஜெயிக்கும். இருந்தாலும் தர்மமே மறுபடியும் வென்று விடும்.* உள்ளத்திலே உண்மை ஒளி உண்டானால், வாக்கினிலே ஒளி உண்டாகும்.* கல்வியும், தவமும் எந்த வயதிலும் கற்றுக் கொள்ள ஆரம்பிக்கலாம். இதற்கு வயது தடையல்ல.- பாரதியார்