உள்ளூர் செய்திகள்

முடியவில்லை என்று சொல்லாதே

* பெண்கள் ஆண்களிடம் அன்புடன் இருக்க வேண்டுமானால் ஆண்கள் பெண்களிடம் அசையாத பக்தி செலுத்த வேண்டும், பக்தியே பக்தியை விளைவிக்கும்.* உலகில் உள்ள அனைத்து துன்பங்களைக் காட்டிலும் வறுமைத் துன்பம் கொடியது. இவ்வுலகத்தில் அனைத்துச் சிறுமைகளைக் காட்டிலும் ஏழ்மையே அதிகச் சிறுமையானது.* 'என்னால் செய்ய முடியவில்லை' என்று சொல்லிக்கொண்டு எந்தச் செயலையும் கைவிட்டு விடாதே. அந்த வேலையை உன்னை விடதிறமையுள்ள ஒருவன் கையில் கொடுத்து அவன் கீழ் சிற்றாளாக இருந்து தொழில் பழகிக் கொண்டால் நீயும் அதைச் செய்ய முடியும். * ஒருவன் தன்னை எப்படி நினைத்துக் கொள்கிறானோ அப்படியே ஆகிவிடுகிறான். குறிப்பாக, தன்னைத் தானே ஆளவேண்டும், தன்னைத் தானே அறிய வேண்டும், தன்னைத் தானே காக்க வேண்டும், தன்னைத் தானே உயர்த்த வேண்டும் என்று நினைத்தால் அப்படியே நடக்கும்.* துன்பம் ஏற்படும் போது கலங்காமல் அதைப்பார்த்து சிரிக்க வேண்டும், அந்த சிரிப்பே அத்துன்பத்தை வெட்டுவதற்குரிய வாளாய் மாறிவிடும்.- பாரதியார்