கல்விக்கு வயதில்லை
UPDATED : அக் 20, 2014 | ADDED : அக் 20, 2014
* பிறர் மனதில் உங்களைப் பற்றிய பொய் மதிப்பு உண்டாக்க இடம் தருவது கூடாது.* தர்மத்தை சூது கவ்வும். ஆனால், கடைசியில் தர்மம் ஒருநாள் வென்றே தீரும்.* எந்த வயதில் வேண்டுமானாலும் மனிதன் கல்வி கற்கத் தொடங்கலாம்.* உண்மை பக்தியே அமிர்தம் போல இனிமையானது. சத்திய விரதத்தை மேற்கொள்பவன் ஆனந்தநிலை அடைவான்.* உடம்பு வலிமையாக இருக்க வேண்டுமானால் மனமும் வலிமையாக இருந்தாக வேண்டும்.* அன்பு எல்லா துயரங்களையும் மாற்றி விடும்.- பாரதியார்