தொட்டதெல்லாம் துலங்கும்
UPDATED : ஏப் 05, 2016 | ADDED : ஏப் 05, 2016
* தெளிந்த அறிவும் இடைவிடாத முயற்சியும் ஒரு மனிதனுக்கு இருந்து விட்டால் தொட்டதெல்லாம் துலங்கும்.* மற்றவர் உள்ளத்தில் உங்களைப் பற்றிய தவறான மதிப்பு உண்டாவதற்கு ஒருபோதும் இடம் அளித்து விடாதீர்கள்.* உள்ளத்தை கடவுளுக்குப் பலியாகக் கொடுத்து விடுங்கள். அதுவே சிறந்த யாகம்.* மன உறுதி இல்லாதவனுடைய உள்ளம் குழம்பிய கடலுக்குச் சமமாகும்.* பெரிய பெரிய கஷ்டங்கள் பட்ட பிறகு தான் சிறிய உண்மைகள் புரிய ஆரம்பிக்கின்றன.- பாரதியார்