துணிவுடன் முன்னேறு!
UPDATED : மார் 20, 2017 | ADDED : மார் 20, 2017
* யாருக்காகவும், எதற்காகவும் பயப்பட வேண்டாம். லட்சியத்தில் உறுதி கொண்டு துணிவுடன் முன்னேறு.* ஆலமரத்தை விழுதுகள் தாங்குவது போல, பெற்றோரைக் காப்பது பிள்ளைகளின் கடமை.* உண்மையைப் பேசி, தர்ம வழியில் நடப்பவர் வாழ்வில் எல்லா நன்மையும் உண்டாகும்.* பேச்சில் மட்டுமின்றி, செயலிலும் அன்பை வெளிப்படுத்த வேண்டும்.* உடல்நலன் பேணுவதில் அக்கறை கொள். இல்லாவிட்டால் வாழ்க்கை நரகமாகி விடும்.- பாரதியார்