உழைப்பதில் தான் சுகம்!
UPDATED : ஆக 31, 2011 | ADDED : ஆக 31, 2011
* தன்னைத்தான் அடக்குதல், பிறர் துன்பம் தீர்த்தல், மற்றவர் நலன் விரும்புதல், கடவுளை வணங்குதல் ஆகிய நான்கு கடமைகளும் மனிதனுக்கு அவசியமானவை. நலிந்த ஏழை மக்களுக்கு உதவி செய்தலே மிகவும் முக்கியமானது. * சுகமாக வாழ்பவனைக் கண்டு பொறாமைப்படாமல் அவனிடம் நட்போடு பழகுங்கள். நம்மால் முடியாத ஏதோ ஒன்றை செய்ய முடிந்ததால் தான் ஒருவன் வெற்றி பெறுகிறான் என்ற உண்மையை உணர்ந்தால் எவ்விதமான காழ்ப்புணர்வும் உள்ளத்தில் தோன்றாது. * சுயநலத்தை மறந்துவிடுங்கள். தெய்வத்தை முழுமையாக நம்புங்கள். உண்மையைப் பேசுங்கள். நியாயத்தை எப்போதும் செய்யுங்கள். எல்லா இன்பங்களும் உங்களை வந்து சேரும்.* எப்போதும் பாடுபட்டு உழைக்கக் கற்றுக் கொள்ளுங்கள். உழைப்பிலே சுகமிருக்கிறது. வறுமை, நோய், இயலாமை ஆகிய தீமை எல்லாம் உழைப்பைக் கண்டு ஓடிவிடும். - பாரதியார்