உள்ளூர் செய்திகள்

தொழிலில் பக்தி வேண்டும்

* பிறப்பினால் உயர்வு தாழ்வு எண்ணுதல் கூடாது. மதபேதங்கள் இருந்தாலும் மக்கள் மனதில் விரோத எண்ணம் கூடாது. தொழில் முறையினால் பெருமையோ, சிறுமையோ இல்லை. இந்த உணர்வுகள் அனைவரிடமும் இருக்குமானால் அமரத்தன்மை உண்டாகும்.

* மனிதன் பாவத்தை ஒழித்தால் தான் மனநிம்மதியும், அமரத்தன்மையும் பெறுவான். பாவங்களில் எத்தனையோ விதங்கள் உண்டு. ஏதாவது ஒரு பாவத்தை வெல்லும் முயற்சியில் கஷ்டப் பட்டு வெற்றி பெற்றவன் எல்லா பாவங்களில் இருந்தும் விடுதலை பெறுவது திண்ணம்.

* பாவ, புண்ணியங்களுக்கு தகுந்தபடி உயர்ந்தோ, தாழ்ந்தோ பிறவி உண்டாகும். பாவம் செய்தால் அடுத்த பிறவியில் மிருகமாகப் பிறக்க நேரிடும் என்றால் மனம் பதைக்கிறான். ஆனால், மனிதப் பிறவியில் மிருகத்தைப் போல வாழ்கிறான்.

* அசைக்கமுடியாத பொறுமையும், சிரத்தையும் இருந்தால் செய்யும் தொழிலில் சிரமம் தோன்றாது. உன்னதமான வெற்றிகளைப் பெற்று வாழலாம். தொழிலில் பக்தி உண்டானால் உடம்பில் புதிய ரத்தமும், வலிமையும் உண்டாகும். முகத்தில் ஒளி உண்டாகும்.

-பாரதியார்