உயர்ந்த சிந்தனை வேண்டும்
UPDATED : ஆக 20, 2013 | ADDED : ஆக 20, 2013
* தன்னைத் தானே திருத்திக் கொள்ளாதவனுக்கு பிறரைத் திருத்தும் அதிகாரம் கிடையாது.* உயர்ந்த சிந்தனைகளை மனதில் நிரப்புங்கள். தியானம் செய்வதை தவற விடாதீர்கள்.* சுகபோகத்திற்குள் கட்டுப்படாமல், வானத்தில் சுற்றும் பருந்து போல, சுதந்திரமாக வாழுங்கள்.* எல்லா சாஸ்திரங்களும் உண்மை தான் என்றாலும், எல்லாருக்கும் எப்போதும் அது ஒத்து வராது.* சத்தியம் ஒன்று தான். அதனை ஆராதிக்கும் வழிகள் பல. சத்திய விரதத்தைக் கடைபிடித்து, உண்மையின் பாதையில் செல்பவன் ஆனந்தம் அடைவான்.* சகுனம் பார்க்கும் வழக்கம், செய்யும் செயல்களுக்கு பெருந்தடையாக இருக்கிறது என்றால் மிகையில்லை.* அன்பு பொறுத்துக் கொள்ளும். அன்புள்ள இடத்தில் கோபத்திற்கு இடமில்லை. ஒருவேளை கோபம் வந்தாலும் அடங்கி விடும்.- பாரதியார்