உள்ளூர் செய்திகள்

ஓயாமல் முயற்சி செய்

* தியானத்தின் சக்தியை எளிதாக நினைக்க வேண்டாம். விரும்பியதைப் பெற இதை விடச் சிறந்த மார்க்கம் இல்லை.* அமைதி தரும் துாய எண்ணங்களை மனதில் நுழைய அனுமதி அளியுங்கள்.* மிருகநிலையில் இருக்கும் மனிதரைத் தேவநிலைக்கு உயர்த்தும் பள்ளிக்கூடமே கோவில்.* தன்னை விட பலவீனமானவர்களுக்கு மனிதன் அநியாயம் செய்யும் வரை கலியுகம் இருக்கும்.* பேச்சு ஒன்றாகவும், செயல் வேறொன்றாகவும் இருப்பவர்களின் உறவைத் தவிருங்கள்.* தன்னைத் தானே திருத்திக் கொள்ளும் முயற்சியில், மனிதனுக்கு ஓய்வு என்பதே கூடாது.-பாரதியார்