உள்ளூர் செய்திகள்

சூரியதேவனைப் போற்றுவோம்

* தெய்வீக ஒளியே! சூரிய தேவனே! வானில் பிரகாசிப்பவரே! உலகத்தை காப்பவரே! எமக்கு வேண்டிய வரங்களைத் தந்தருள வேண்டும்.* வலிமையின் தந்தையே! விரிந்த அறிவின் இருப்பிடமே! உமது அருளால் நன்மை உண்டாகட்டும்.* ஆக்க சக்தியே! சக்தி மிக்கவரே! அதிகாலையின் வரவே! புகழின் உச்சியே! எமக்கு வெற்றியைத் தந்தருள வேண்டும்.* வெம்மையான கதிர்களைப் பரப்புபவரே! இந்த உலகை வளம் பெறச் செய்ய வேண்டும்.- பாரதியார்