உள்ளூர் செய்திகள்

தைரியம் வளர்ப்போம்

* உண்மையான பக்தி இருந்தால் மட்டுமே மனம் தைரியமாக இருக்கும். தைரியம் இருந்தால் மட்டுமே உண்மையான பக்தி ஏற்படும். * அன்பு ஒன்றினால் மட்டுமே உலகிலுள்ள துன்பத்தை எல்லாம் மாற்ற முடியும். * உலகிலுள்ள எல்லாவித வளத்திற்கும் அறிவே வேராக இருக்கிறது. அறிவிருந்தால் எதையும் வெல்லலாம். * மனிதன் சம்பாதித்து கொள்ள வேண்டிய குணங்களில் மிக முக்கியமானது பொறுமை. * கவலையும், பயமும் மனிதனை கொல்லும் விஷங்கள். உள்ளத்தில் பயத்தை வளர்ப்பவன் பாம்பை வளர்ப்பதாகப் பொருள். பாரதியார்