உள்ளூர் செய்திகள்

மனஉறுதியுடன் வாழுங்கள்

* நல்லதைச் செய்ய வேண்டும் என்று நினைத்தால் மட்டும் போதாது. அதைச் செய்வதற்கு ஒரு காலவரையறையை நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும். செய்வோம் செய்வோம் என காலம் கடத்தி கொண்டே இருப்பதால் அதைச் செய்ய முடியாமலே போகும் சூழ்நிலை ஏற்பட்டு விடும்.* ஒற்றுமைக்கு எந்த சக்தியையும் எதிர்த்து வெற்றி பெறும் வலிமையிருப்பதால் ஒருமித்த கருத்துடன் வாழுங்கள். பாரபட்சம் பார்த்து பிரிந்து வாழாதீர்கள்.* நோய் நீங்கவும், உடல் வலிமையுடன் திகழவும் நம்பிக்கையும், மனஉறுதியும் தேவை.* மனிதர்களிடத்தில் இருக்க வேண்டிய அளப்பரிய குணம் 'பொறுமை'. பொறுமை உள்ள இடத்தில் தான் இன்பமும், வெற்றியும் இருக்கும்.* மனதில் தோன்றும் எண்ணங்களே செயலாக மாறுகிறது. இந்த செயல்களின் பலனை வைத்து தான் நல்லது நடக்கும். எனவே, நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள்.* கவலையும், பயமும் இல்லாத வாழ்க்கையை அமைத்து கொண்டால், எளிதாக வெற்றி பெறமுடியும்.-பாரதியார்