உள்ளூர் செய்திகள்

உலகத்தையே நட்பாக்கலாம்

* தன்னை மறந்து தெய்வத்தை நம்பு. உண்மையைப் பேசி நியாயத்தைச் செய். வாழ்வில் எல்லா இன்பங்களும் உன்னை வந்து சேரும்.* பணிவு, பொறுமை, கருணை போன்ற நற்குணங்களே உண்மையான நாகரிகம், அழியாத தன்மையை விளைவிக்கும். * எல்லா உயிர்களிடமும் அன்பு செலுத்தினால், நம்மிடமுள்ள ஜீவசக்தி வளர்ச்சி பெறத் தொடங்கும். * விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், மனிதன் வேலை செய்து கொண்டே இருக்கவேண்டும்.* பெண்களின் பங்களிப்பு இல்லாமல் எந்த ஒரு நாடும் எவ்விதமான வளர்ச்சியையும் அடைய முடியாது.* கருணை இல்லாத இடத்தில், தெய்வபக்தி என்பது வேஷத்தைத் தவிர வேறொன்றுமில்லை.* அதர்மமே உலகில் இல்லாமல் போய்விட்டால், தர்மம் உண்ண உணவில்லாமல் மடிந்து விடும்.* எல்லா மனித முயற்சிகளிலும் தவறுகள் ஏற்படுவது இயல்பான ஒன்றே.* ஒருவன் தனக்குத் தானே நட்பாகி விட்டால், உலகம் முழுதும் அவனுக்கு நட்பாகி விடுகிறது.- பாரதியார்