மன்னிக்கும் குணம் வேண்டும்
UPDATED : செப் 15, 2014 | ADDED : செப் 15, 2014
* எல்லாவித தானத்திலும் கல்வி தானமே சிறந்தது. ஆசிரியர் பணியின் மூலம் சமூகத்தில் குற்றங்கள் குறையும்.* அஞ்சாத மன தைரியத்தைக் காட்டிலும் சிறந்த குணம் வேறில்லை. தைரியசாலி எல்லா இன்பத்தையும் அடைவான்.* எந்த செயலுக்கும் காலம் துணை நின்றால் ஒழிய அதனை நிறைவேற்றுதல் மனிதனுக்குச் சாத்தியமில்லை.* குடும்ப வாழ்க்கையே, மற்ற எல்லா வாழ்க்கையையும் விட சிறந்தது.* பிறர் குற்றங்களை மன்னிக்கும் குணத்தை குற்றமில்லாத நல்லோரிடம் மட்டுமே காண முடியும்.- பாரதியார்