ஆண்டவனுக்கு சேவை
UPDATED : ஜூலை 10, 2014 | ADDED : ஜூலை 10, 2014
* உண்மையே நிலையான இன்பமளிக்கும். மற்றவரிடம் பொய் மதிப்பு உண்டாக இடம் அளிப்பது கூடாது.* அச்சமோ மடமைக்கு வழிவகுக்கிறது. அச்சமின்மை அறிவு வழியில் நடக்கத் தூண்டுகிறது.* ஆயுள் உள்ளவரை ஆண்டவனுக்கு சேவை செய்யும் நற்குணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.* பிறரிடம் கையேந்தி வாழ்பவன் தன்னைத் தானே விலைப்படுத்திக் கொள்கிறான்.* புதியதைக் கற்பதற்கும், தியானம் பயில்வதற்கும் வயது ஒரு தடையாக இருக்க முடியாது.- பாரதியார்