வேலை வணங்குவதே வேலை
* முருகனின் வீரத் திருவிழிப் பார்வையும், வெற்றிவேலும், மயிலும் நம்மை முன்னின்று எப்போதும் காப்பாற்றும்.* தோகைமயிலில் பவனி வரும் கந்தனின் அருளைப் பெற அவருடைய வேலை நாளும் வணங்குவது நமது வேலையாகும். * மண்ணும், காற்றும், சூரியனும், சந்திரனும் உன்னையும், என்னையும் சூழ்ந்து நிற்கும் உயிர்களும், நீயும் நானும் தெய்வமென்று வேதம் கூறுகிறது. இவை தான் தெய்வம். இதனைத் தவிர வேறு தெய்வமில்லை. * மாறுதல் என்றால் அனைத்தையும் ஒரே நேரத்தில் மாற்றிவிடுவது என்று அர்த்தமில்லை. நல்ல அர்த்தமுள்ள அம்சங்களை வைத்துக் கொண்டு பயனில்லாத கெட்ட அம்சங்களை மாற்ற வேண்டும். * உடலை நாம் வெற்றி கொள்ள வேண்டும். அது எப்போதும் நாம் சொன்னபடி கேட்க வேண்டும். அது சொன்னபடி நாம் கேட்கலாகாது.* சேமத்துடனும் செழிப்புடனும் ஊர் இருந்தால் தான் வியாபாரம் செழிக்கும். வியாபாரத்துக்கு மகிமை வர வேண்டுமானால் ஊருக்கே ஒரு மகிமை வரவேண்டும்.-பாரதியார்