காலம் பொன்னானது
UPDATED : பிப் 27, 2014 | ADDED : பிப் 27, 2014
* தன்னிடத்தில் உலகத்தையும், உலகத்திடம் தன்னையும் காண்பதே கண்களால் பெற வேண்டிய பயனாகும்.* அநியாயம் செய்வதை உலகம் கைவிட்டால், மீண்டும் மண்ணில் தர்மம் தழைத்து கிருதயுகம் உண்டாகும். * துளியும் பிறரை ஏமாற்றுவதில்லை என்ற பரிபூரண நிலையை அடைந்து விட்டால் அவனே கடவுள்.* காலம் பணவிலை உடையது என்ற பழமொழி இருக்கிறது. பொன்னான நேரத்தை வீணாக்கக்கூடாது. இதை நம்மவர்கள் புரிந்து கொள்வதில்லை.* நல்ல விஷயத்தைத் தள்ளிப்போடுவது கூடாது. நினைத்த அளவிலேயே அதற்கான நடவடிக்கையில் இறங்குவது நல்லது.பாரதியார்