உள்ளூர் செய்திகள்

காலமே கை கொடுக்கும்

* எந்தச் செயலைச் செய்தாலும் அதை வெற்றிகரமாக நிறைவேற்ற காலம் கை கொடுக்க வேண்டும். விதியின் வலிமை அந்தளவுக்கு பெரியது.* குற்றத்துக்கு காரணம் அறியாமையே. குற்றம் செய்யாமல் இருக்க விரும்பினால் நல்லவர்களுடன் பழக வேண்டும்.* நம்மால் முடியவில்லையே என ஒரு செயலை விட்டு விடக்கூடாது. நம்மைக் காட்டிலும் திறமையுள்ளவன் கையில் கொடுத்து அதை முடிக்க வேண்டும் அல்லது அவனிடமே சிற்றாளாக பணிபுரிந்தேனும் தொழில் கற்று செய்து முடித்து விட வேண்டும்.பாரதியார்