முயற்சித்தால் முடியும்
UPDATED : பிப் 10, 2015 | ADDED : பிப் 10, 2015
* சத்தியம் என்னும் கடவுள் ஒன்றே. அதை ஆராதிக்கும் வழிகள் பல இருக்கின்றன.* வாழ்வில் சத்திய விரதத்தை நோற்பவன், முடிவில் ஆனந்தம் அடைகிறான்.* தன்னைத் தானே திருத்திக் கொள்ளாதவன், பிறருக்கு உபதேசிக்கும் அதிகாரத்தைப் பெற முடியாது.* யாரும் எந்த தொழிலை வேண்டுமானாலும் பழகவும், செய்யவும் முடியும். முயற்சித்தால் முடியாதது ஒன்றில்லை.* மனப்பக்குவம் வந்து விட்டால், பக்தன் கேட்ட வரத்தை அளிக்க தெய்வம் காத்திருக்கிறது.-பாரதியார்