உள்ளூர் செய்திகள்

இயற்கையைப் போற்றுங்கள்

* தனக்குத் தானே அடிமைப்பட்டுக் கிடக்கும் மனிதன், தனக்குத் தானே போராடித்தான் சுதந்திரம் பெற முடியும்.* எதைச் செய்தாலும் தரமாகச் செய்யுங்கள். அது வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கும்.* குடும்பத்திற்காக மட்டும் இல்லாமல், சுற்றியுள்ள சமுதாயத்திற்கும் பயனளிப்பதாக வாழ்வு இருக்க வேண்டும்.* இயற்கையின் அழகில் ஈடுபடுங்கள். ஒவ்வொரு கணப்பொழுதையும் பயனுள்ளதாக்குங்கள்.* நெருப்பில் கவனமாக இருப்பது போல, வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் கவனம் வையுங்கள்.- புத்தர்