நல்ல எண்ணம் வேண்டும்
* உண்மையைப் பேசுங்கள், கேட்பவர்களுக்கு இயன்றதைக் கொடுங்கள், இந்த இரு வழிகளாலும் ஒருவன் இறைவனின் சந்நிதியை அடையலாம்.* எதிர்ப்பும் தடையும் இருந்தால் தான் மனிதன் விரைந்து முன்னேறுவான், காற்றாடி காற்றை எதிர்த்துத்தான் மேல் எழும்புகிறது.* கோபத்தை நயத்தால் வெல்ல வேண்டும், தீமையை நன்மையால் வெல்ல வேண்டும், பொய்யினை உண்மையால் வெல்ல வேண்டும்.* சந்தனக்கட்டை, மல்லிகை முதலியவற்றின் மனம் காற்றின் எதிர்த் திசையில் செல்வதில்லை, ஆனால், நல்லவர்களின் புகழ் மணமோ சூறைக் காற்றையும் எதிர்த்துக் செல்கிறது. * தூய்மையான எண்ணத்துடன் ஒருவன் செயல்பட்டால், அவனை விட்டுவிலகாத நிழல் போல, மகிழ்ச்சி அவனைப் பின் தொடர்ந்து செல்கிறது.* மரியாதையுணர்வு, அடக்கம், மனதிருப்தி, நன்றி, நல்ல அறிவுரைகளைக் கேட்டல் இவையே சிறந்த அதிர்ஷ்டத்தை தரும் குணங்களாகும்.* நன்றாக கட்டப்பட்ட வீட்டில் மழை நீர் நுழைவதில்லை, அதுபோல் நல்ல உள்ளத்தில் ஆசை நுழைவதில்லை.- புத்தர்