உள்ளூர் செய்திகள்

அன்பு வாழ்வே சிறந்தது

* அடக்கமில்லாமல் நூறாண்டு வாழ்வதை காட்டிலும் ஒழுக்கத்துடன் ஒருநாள் வாழ்வு சிறப்பானது.* கோபத்தை அடக்கி மனம் என்னும் கடிவாளத்தை எப்போதும் கட்டுப்பாட்டில் வைத்திருங்கள்.* கடினமான பாறை புயலைக் கண்டு கலங்காதது போல புகழ், இகழ் ஆகிய இரண்டையும் கண்டு அறிஞர்களின் மனம் கலங்குவதில்லை.* பகையைப் பகையால் தணிக்க முடிவதில்லை. அன்பால் மட்டுமே பகை தீரும்.* மனதை அன்பு, அருளால் நிரப்புங்கள். பிறருக்கு உதவி செய்ய முயலுங்கள். ஆனால், தீமை செய்ய மனதாலும் நினைக்காதீர்கள்.* அன்பு வாழ்வே சிறந்த வாழ்வு. அன்பிருக்கும் இடம் தேடி அமைதி தானாகவே வந்து விடும்.* எந்த விஷயத்தையும் யார் கூறுகிறார் என்பதை விட, என்ன கூறுகிறார் என்பதே முக்கியமானது. * தூய எண்ணத்துடன் பேசும்போதும், செயல்படும்போதும் மகிழ்ச்சி நிழல் போல நம்மைத் தொடர்கிறது.- புத்தர்