உண்மை மட்டுமே பேசு!
UPDATED : ஜன 25, 2015 | ADDED : ஜன 25, 2015
* கூரை இல்லாத வீட்டில் மழைநீர் புகுவது போல, பண்படாத உள்ளத்தில் தீய எண்ணம் புகுந்து விடும்.* உண்மையை மட்டுமே பேசப்பழகு. இல்லையேல் மவுனமாக இருந்து விடு. * சிறிய இன்பங்களை கைவிட்டால் மட்டுமே மனிதன் பேரின்பத்தைப் பெற முடியும்.* நங்கூரம் பாய்ச்சிய கப்பல் போல உண்மை எப்போதும் அமைதியாகவே இருக்கும்.* ஒழுக்கமின்றி நூறாண்டு வாழ்வதைவிட ஒழுக்கமுடன் ஒருநாள் வாழ்வதே சிறப்பானது.* உங்கள் மீதுள்ள குறைகளில் கவனம் செலுத்துங்கள்.- புத்தர்