உள்ளூர் செய்திகள்

பயனுள்ளதைப் பேசுங்கள்

* மலை புயலுக்கு வீழ்ந்து போவதில்லை. அறிவாளி புகழ்ச்சிக்கு மயங்குவதில்லை. * யாரையும் தாழ்வாகக் கருதாதீர்கள். தான் என்ற செருக்கு ஒருவனைத் தாழ்த்தும். * அறிவாளிகளுடன் உறவாடினால், நன்மைக்கான கதவு திறந்து விடும். * ஆயிரம் வீண் வார்த்தைகளை பேசுவதை விட, பயனுள்ள ஒற்றைச் சொல்லால் நன்மை உண்டாகும்.* வாய் பொய் சொல்லலாம். ஆனால், கண்கள் ஒருபோதும் பொய் சொல்வதில்லை. * கேட்டதை எல்லாம் நம்பத் தேவையில்லை. தீர விசாரித்து உண்மையைப் புரிந்து கொள்ளுங்கள்.-புத்தர்