உள்ளூர் செய்திகள்

நல்லதை மட்டும் சிந்தியுங்க!

* உறுதியான பாறை புயல்காற்றுக்கும் அசைந்து கொடுப்பதில்லை. அதுபோல அறிவாளியும், புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் அசைந்து கொடுக்கமாட்டான்.* உடல் நோய் வரலாம். மனநோய் வரக்கூடாது. கவலை, துன்பம், வெறுப்பால், மனம் வாடி விட்டால் வாழ்வின் போக்கே மாறி விடும். * முட்டாளின் தோழமையை விட ஒருவன் தனியாக வாழ்வது எவ்வளவோ மேலானது.* மனதில் தீய எண்ணங்களை நுழைய விட்டால் சேற்றில் விழுந்த யானை போலாகி விடும். நல்ல எண்ணங்களை மட்டுமே சிந்திப்பது அவசியம்.* பொருளற்ற ஆயிரம் சொற்கள் பேசுவதைக் காட்டிலும் பொருளுடைய ஒருசொல் உயர்வானது.* நல்லவழியில் நிர்வகிக்கப்பட்ட மனம், செய்யும் உதவிக்கு அளவே இருக்காது. தாயோ, தந்தையோ, உறவினரோ கூட இந்தளவு உதவி செய்ய முடியாது.* தீய எண்ணத்தை மனதில் நினைத்தால் கூட அதற்கான தண்டனையில் இருந்து மனிதன் தப்பிக்க முடியாது.* தூய்மையான எண்ணம் கொண்டவனை நிழல் போல மகிழ்ச்சி பின்தொடரும்.- புத்தர்