சிறந்த பிரார்த்தனை எது?
* போர்க்களத்தில் வெற்றி பெற்ற வீரனைக் காட்டிலும் தன்னைத் தானே வென்றவனே சிறந்த வீரன்.* வாழ்வில் அறநெறிகளை கடைப்பிடியுங்கள். இம்மையிலும், மறுமையிலும் இன்பத்தை அடைய இதுவே வழி.* அறிஞனோடு வாழ்ந்தாலும், முட்டாளால் அறிவைப் பெற முடியாது. குழம்பின் ருசியை ஒருபோதும் கரண்டியால் அறிய முடிவதில்லை. * உண்மையைப் பேசுங்கள். கோபத்தை தவிர்க்க முயலுங்கள். கையில் இருப்பதைக் கொண்டு மற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள்.* நரை, திரை தோன்றினால் மட்டும் ஒருவர் பெரியவர் ஆக முடியாது. அறிவால் முதிர்ந்திருப்பவரே உண்மையில் பெரியவர். * பிரார்த்தனைகளுக்குள் மிகவும் உயர்ந்தது பொறுமையே. அதுவே மேலான தவம்.* பிறருக்குத் தீங்கு நினைப்பவனைத் துறவி என்று சொல்ல முடியாது.* மனதால் நேசிக்கும் எந்த ஒரு பொருளையும் மனிதன் என்றாவது ஒருநாள் பிரிந்தே ஆகவேண்டும். இந்த நியதிக்கு யாரும் விதிவிலக்கு அல்ல. - புத்தர்