உள்ளூர் செய்திகள்

உழைப்பை நம்புங்கள்!

* எதிர்காலத்தை உருவாக்கும் பொறுப்பு சமுதாயத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. இதில் யாரும் விதிவிலக்கு கிடையாது.* வாழ்வதற்குரிய முதல் தகுதி ஒழுக்கம். ஒழுக்கமுடையவர்களே உலகில் எதையும் சாதிக்க முடியும். இதை இளைஞர்கள் நன்கு உணர்ந்து செயல்படவேண்டும்.* நாளும் தேவைகளை வளர்த்துக் கொண்டே செல்பவனுக்கு மனதில் அமைதி நிலைக்குமா என்பது சந்தேகம் தான்.* உழைப்பின் மீது நம்பிக்கை வையுங்கள். முன்னேற்றத்தின் கதவுகள் திறந்தே இருக்கின்றன. துணிவும், விவேகமும் கொண்டு செயல்படுங்கள்.* தன்னைத் தானே திருத்திக் கொள்ளாதவனால் உலகை திருத்த முடியாது. முதலில் நாம் திருந்த வேண்டும். தன்னால் உலகமும் திருந்தி விடும்.* ஆன்மிகமும், தர்மமும் நம் மனதில் வேரூன்றி விட்டால் உலகில் வன்முறைக்கு இடமே இருக்காது. - கமலாத்மானந்தர்