உள்ளூர் செய்திகள்

மனதைக் கட்டுப்படுத்துங்கள்

* தர்மத்தை வாழ வைத்தால் தன் பங்குக்கு தர்மமும் நம்மை வாழ வைக்கும் என்கிறது ராமாயணம். தர்மத்தை அழிக்க நினைத்தால் அது நம்மை அழித்து விடும்.* நமக்கு தரப்பட்டுள்ள கடமையை, கடவுளுக்குச் செய்யும் தொண்டு என்ற எண்ணத்துடன் செய்து வர வேண்டும். * காட்டாற்று வெள்ளத்தை அணை கட்டி கட்டுப்படுத்தினால், குடிக்கவும், விவசாயத்திற்கும் பயன்படுத்தலாம். அதைப் போல மனதைக் கட்டுப்படுத்தி தர்மவழியில் செலுத்தினால், அபரிமிதமான நன்மை பெறலாம்.* வாழ்வுக்கு இன்ப அனுபவம் அவசியமானது. ஆனால், அது நியாயமானதாகவும், தர்மத்திற்கு உட்பட்டதாகவும் இருக்க வேண்டும்.* வலிமையற்ற உடலை நோய் தாக்கும். அன்பில்லாத சமுதாயத்தை பொறாமை, பூசல், கோபம், பிணக்கு, போர் போன்ற நோய்கள் தாக்கி விடும்.- கமலாத்மானந்தர்