ஒன்றை கோடியாக்கலாம்
UPDATED : மே 31, 2015 | ADDED : மே 31, 2015
* மற்றவர்களின் தவறைத் திருத்தி நல்வழிப் படுத்த அன்பு ஒன்றே சிறந்த வழி.* ஒரே தெய்வத்தை இஷ்ட தெய்வமாக வழிபட்டால் மனம் ஒருமைப்படும்.* ராமாயண அணில் போல இயன்ற உதவியை பிறருக்கு செய்வது அவசியம்.* வாயைக்கட்டி வயிற்றைக் கட்டி என்பதன் பொருள், பேசுவதிலும், உண்பதிலும் மனிதன் கட்டுப்பாடோடு வாழ வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.* மனம் உவந்து செய்யும் தர்மம் ஒரு ரூபாய் என்றாலும், அதை கடவுள் கோடியாக மதித்து அருள்புரிவார்.* எல்லாச் செயலிலும் நல்லதை வெளிப்படுத்துங்கள்.-காஞ்சிப்பெரியவர்