நல்லதைச் செய்யுங்கள்
UPDATED : டிச 20, 2013 | ADDED : டிச 20, 2013
* நாம் செய்த பாவத்தை போக்க ஒரே வழி, நற்செயல்களைச் செய்வது மட்டும் தான்.* நல்ல விஷயமாக இருந்தாலும் கடுமையாக சொல்வது கூடாது. பிறர் ஏற்கும் விதத்தில் அன்புடன் வேண்டும்.* இயற்கையும் மாறுதலுக்கு உட்பட்டது. மலையும், கடலும் கூட காலப்போக்கில் மாறி விடும்.* ஆசைகளை வளர்த்தால், துன்பம் வளரும். ஆசை குறையத் தொடங்கினால், துன்பமும் குறையும்.* நம்முடைய கஷ்டங்களைப் பிறரிடம் சொல்லாமல் யாராலும் இருக்க முடியாது. மனம் விட்டுப் பேசும்போது மனச்சுமை குறைகிறது. - காஞ்சிப்பெரியவர்