குணத்தை மட்டும் பார்!
UPDATED : அக் 20, 2014 | ADDED : அக் 20, 2014
* பிறர் மீது குற்றம் சுமத்தி தன்னை நிரபராதியாக காட்டிக் கொள்ளும் குணம் படித்தவர்களிடம் கூட இருக்கிறது.* ஒருவர் மீதுள்ள குறையை அவர் ஏற்றுக் கொள்ளும் விதத்தில் இதமாகச் சொல்லி திருத்த முயல வேண்டும்.* ஒரு மனிதனிடம் எத்தனை குறைகள் இருந்தாலும் சிறிதாவது நல்ல குணமும் இருக்கவே செய்யும். அதைக் காணப் பழகிக் கொள்ள வேண்டும்.* ஒருவரைப் புகழ்வதில் நிதானம் காட்ட வேண்டும். ஒரேயடியாக புகழும் போது தான் என்ற அகந்தை ஏற்பட வாய்ப்பிருக்கிறது.- காஞ்சிப்பெரியவர்