எளிமையாக வாழ்வோம்
UPDATED : நவ 10, 2013 | ADDED : நவ 10, 2013
* வாழ்வில் ஒழுக்கம் வந்து விட்டால், நாம் ஈடுபடும் எந்த துறையிலும் நேர்த்தியும், ஒழுங்கும் வெளிப்படத் தொடங்கும்.* பாவம் நீங்க ஒரே வழி கடவுளைத் தியானிப்பது மட்டுமே. இதனால், மனம் தூய்மை பெறுகிறது. தியானம் செய்வதே அன்றாட வாழ்வின் முதல்பணியாக இருக்க வேண்டும்.* நாலாதிசையிலும் மனம் ஓடிக் கொண்டிருக்கிறது. அதை முதலில் கட்டுப்படுத்தி பக்தியில் ஈடுபடுத்துங்கள்.* மற்றவர்களின் ஆசைகளைத் தூண்டும் விதத்தில் ஆடம்பரமாக வாழ்வது கூடாது. எல்லோருமே எளிய வாழ்க்கை வாழத் தொடங்கினால், சமுதாயத்தில் அமைதி உண்டாகும்.* பிறருடைய துன்பத்தைப் போக்க வேண்டியது நம் கடமை. பணம் தான் என்றில்லாமல், உழைப்பாலோ, வாக்காலோ முடிந்த உதவியைச் செய்ய வேண்டும்.- காஞ்சிப்பெரியவர்