மனதை அன்புமயமாக்கு!
UPDATED : நவ 10, 2014 | ADDED : நவ 10, 2014
* சம்பாதித்த பணம் நம்முடன் வரப் போவதில்லை. செய்த பாவ, புண்ணியமே மறு உலகத்திற்கும் கூட வரும். * யாருக்கும் எதற்கும் கெடுதல் நினைக்காதபடி மனதை அன்பு மயமாக்கி விடுவதே அகிம்சை. * மனதில் தோன்றும் நல்ல எண்ணங்களை மட்டுமே மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். * மானம், உயிர் இரண்டையும் காப்பாற்றிக் கொள்வதே வாழ்வின் அடிப்படைத் தேவை. * தேவையைக் குறைத்துக் கொள்ளப் பழகி விட்டால் மனிதன் எப்போதும் கவலையின்றி வாழலாம். - காஞ்சிப்பெரியவர்