உலகம் நலம் பெறட்டும்
UPDATED : அக் 21, 2016 | ADDED : அக் 21, 2016
* நாம் நலமுடன் வாழ்வதோடு, இந்த உலகிலுள்ள அனைவரும் நலமுடன் வாழ நினைப்பதே உத்தமமான குணம்.* வாழ்வில் ஒழுக்கம் ஏற்பட்டு விட்டால் செய்யும் செயல்களில் நேர்த்தியும், ஒழுங்கும் வெளிப்படத் தொடங்கும்.* உடல் அழுக்கு நீங்க அன்றாடம் நீராடுவது போல, மன அழுக்கு நீங்க தினமும் தியானத்தில் ஈடுபட வேண்டும்.* கடவுளுக்கு நன்றி செலுத்தும் நோக்கத்தில் தான், கோவிலில் சுவாமிக்கு நைவேத்யம் படைக்கப்படுகிறது. காணிக்கையும் அளிக்கிறோம்.- காஞ்சிப்பெரியவர்