நல்லதையே பேசுங்கள்
UPDATED : செப் 11, 2016 | ADDED : செப் 11, 2016
* பொருளற்ற பேச்சுக்கு இடமளிக்க வேண்டாம். நல்லதை மட்டுமே பேசவும் கேட்கவும் செய்யுங்கள்.* எளிமையே நிம்மதிக்கான வழி. தேவைகளைக் குறைப்பது நல்லது. ஆடம்பர எண்ணத்தால் நமக்கு நாமே தீங்கு செய்தவர்களாகிறோம்.* அன்பால் பிறரைத் திருத்த முயல்வதே நீடித்த பலனைக் கொடுக்கும். அடக்குமுறையால் எந்த நன்மையும் விளைவதில்லை.* சிவ சிவ, ராம ராம என்று கடவுளின் திருநாமத்தை ஜபிப்பது, மனதிற்கு தக்க துணையாக இருக்கும்.- காஞ்சிப்பெரியவர்