உள்ளூர் செய்திகள்

கடவுளைச் சரணடைவோம்

* பொருளைத் தேடி அலைவதால் வாழ்க்கை தரம் உயர்வதில்லை. தரமான வாழ்வு என்பது அவரவர் பெற்றிருக்கும் மனநிறைவைப் பொறுத்த விஷயம்.* மனம் தியானத்தில் நிலைத்து நிற்க வேண்டுமானால், கடவுளின் திருவடிகளை கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும்.* அது வேண்டும், இது வேண்டும் என்று ஏதாவது ஒன்றைத் தேடி அலையும் வரையில், எத்தனை பணம் இருந்தாலும் அவனை பரம ஏழை என்று தான் சொல்ல வேண்டும்.* சுவரில் எறிந்த பந்து திரும்புவது போல, மனதில் நிறைவேறாத ஆசைகளே கோபமாகத் திரும்பி, நம்மைப் பாவச் செயல்களில் தள்ளிவிடுகிறது.* பழைய பாவங்களுக்குப் பரிகாரம் தேடுவதை விட, புதிய பாவச்சுமை சேராமல் பார்த்துக் கொள்வது அவசியம். அதற்கு ஒரே வழி கடவுளின் திருவடியை சரணடைவது தான்.- காஞ்சிப்பெரியவர்