உள்ளூர் செய்திகள்

மனம் மாறும் தன்மை கொண்டது

* வாழ்க்கையை வியாபாரமாக கருதாமல், பிறரது துன்பம், நோய் தீர்க்க கிடைத்த வாய்ப்பாக கருதி உதவிக்கரம் நீட்டுங்கள்.* மனம் எதைத் தீவிரமாக சிந்திக்கிறதோ, அதுவாகவே மாறி விடும் தன்மை கொண்டது.* சொல்வது யாருக்கும் எளிதானது. ஆனால் அதை நடைமுறை வாழ்வில் பின்பற்றுவது மிகக் கடினம்.* பெரும்பாலும் கோபத்தினால் நமக்கு நாமே பெருந்தீமைகளை உண்டாக்கிக் கொள்கிறோம்.* மனதை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.- காஞ்சிப்பெரியவர்