சிந்தியுங்க! ஒரே ஒரு நிமிஷம்
UPDATED : மே 25, 2012 | ADDED : மே 25, 2012
* நாம் உயர்வாக இருக்கிறோம். ஆனால், நம் உதவியைப் பெறுபவர் நம்மை விடத் தாழ்ந்தவராக இருக்கிறார் என்று நினைத்து கொள்ளும்போதே செய்யும் உதவி பயனற்றதாகிவிடும். * தினமும் தூங்கும்போது இன்று நாம் யாருக்காது உதவி செய்திருக்கிறோமா என்பதைப் பற்றி ஒரு நிமிஷமாவது சிந்திக்க வேண்டும். * ஒருவருக்கு பணத்தால் தான் உதவி செய்யவேண்டும் என்பதில்லை. உடலாலும் மற்றவர்க்கு உதவி செய்யலாம். அதுவும் கூட புண்ணியமானது தான். * சம்பாதித்த பின் தானதர்மம் செய்யலாம் என்று தள்ளிப்போடக்கூடாது. அவ்வப்போது செய்வது நல்லது.* இளைஞர்கள் பொழுதுபோக்கு என்ற பெயரில் நேரத்தை வீணாக்காமல், பிறருக்கு தொண்டு செய்து பயனுள்ளதாக்க வேண்டும்.* உடல் வலிமையைக் காட்டிலும் மனவலிமை முக்கியம். ஒழுக்கத்துடன் இருந்தால் மனவலிமையை எளிதாகப் பெறமுடியும். - காஞ்சிப்பெரியவர்