உள்ளூர் செய்திகள்

லட்சியத்தில் உறுதி வேண்டும்

* லட்சியத்தில் உறுதி மிக்கவன் மனம் தளராமல் முயற்சியில் ஈடுபடுவான்.*ஆரம்பத்தில் கடவுள் மீது பயபக்தி இருக்க வேண்டும். பிறகு பயத்தை விட்டு பக்தி செலுத்த வேண்டும்.* நண்பன் கூட ஒருகாலத்தில் எதிரியாக மாறலாம். அதனால் நம் நண்பர் கடவுள் மட்டுமே.* நம்மால் கடவுளுக்கு ஏதும் ஆக வேண்டியதில்லை. அவரின் பெயரை ஜெபிப்பதால் நம் மனம் துாய்மை பெறுகிறது.* கடவுள் நமக்கு நல்லறிவைக் கொடுத்திருக்கிறார். அதைப் பயன்படுத்தி விவேகமுள்ளவராகச் செயல்படுங்கள்.-அமிர்தானந்தமயி