ஆண்டவன் அம்மாவுக்கு சமம்
<P>மனதில் பக்தி இருக்குமானால் கடவுளை உணர முடியும். அவருடைய அருளைப் புரிந்து கொள்ள முடியும். அவரின் கருணையை ஆழ்ந்து அனுபவிக்க முடியும். ஏனென்றால் கடவுள் எங்கும் எதிலும் நிறைந்திருக்கிறார். <BR>ஆற்றில் தண்ணீர் ஓடுகிறது. நாம் தான் குடத்தில் எடுத்து வரவேண்டும். அதுபோல் இறைவனின் கருணை எங்கும் நிரம்பி இருந்தாலும் நாம் தான் அதைப் பெற்றுக் கொள்ள நம்மை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். கடவுள் நம்மைப் பெற்ற தாய் போன்றவர். தாய் நம்மை அடித்துத் திருத்தினாலும் அவள் உள்ளத்தில் இருக்கும் அன்பு மாறுவதில்லை. தாயின் அன்பு எல்லாக் குழந்தைகளின் மீதும் சமமாகவே இருக்கும். அதுபோல, ஆண்டவன் சோதனைகள் மூலம் நம்மைத் திருத்துகிறார். உயிர்களைப் படைத்த இறைவன் எது நல்லது எது கெட்டது எது நிலையானது எது அழியக்கூடியது என்று தெரிந்து கொள்ளும் பகுத்தறிவை நமக்குக் கொடுத்திருக்கின்றான். அதைப் பயன்படுத்தி நல்லவைகளை மட்டுமே நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். லாபநஷ்டங்களைப் பற்றி சிந்திக்காது, நமது செயல்களின் பயனை இறைவனிடம் அர்ப்பணம் செய்யுங்கள். அதுவே சரியான துறவாகும். </P>