பால் போல் மனம்
UPDATED : செப் 11, 2014 | ADDED : செப் 11, 2014
* மன்னிக்கும் குணத்தால் மனதில் அன்பு பெருகும். அச்சம் நீங்கி மனதைரியம் வளரும்.* பால் போல மனம் வெண்மையாக இருக்க வேண்டும். கள்ளம் கபடம் அற்ற உள்ளத்தில் தூய எண்ணம் உருவாகும்.* பொய்யை விலக்கி விட்டு உண்மையை மட்டும் பேசுவது என்பது மிகவும் அரிதான செயல் தான்.* கூட்டு உழைப்பால் கிடைத்த பொருளை கூட்டாளிக்கும் பகிர்ந்து அளிப்பதே உயர்ந்த செயல்.* அதர்ம வழியில் ஈட்டிய பொருளின் மூலம் நல்ல அனுபவம் ஒருவருக்கு உண்டாகாது.- மகாவீரர்