உள்ளூர் செய்திகள்

கொடுத்து மகிழ்வோம்

* உண்மையின் வழியில் நடந்தால் உள்ளத்தூய்மை உண்டாகும். அதுவே ஒழுக்கத்தின் உயிர்நாடி.* தேவைக்கு மேல் பொருள் கிடைத்தாலும் சேமித்து வைக்காமல், பிறருக்கு கொடுத்து மகிழுங்கள்.* உண்மை பேசும் நல்லவன் பெற்ற தாயைப் போல நம்பிக்கைக்கு உரியவன்.* நல்ல நம்பிக்கை இல்லாமல் நல்ல அறிவோ, நல்லொழுக்கமோ உண்டாவதில்லை.* மனம், மொழி, மெய் மூன்றாலும் எந்த உயிருக்கும் தீங்கு எண்ணாமல் வாழ்வதே புலனடக்கம்.- மகாவீரர்