கடவுளின் கருவியாக இரு!
UPDATED : மே 06, 2015 | ADDED : மே 06, 2015
* நீ கடவுளின் கையில் கருவியாக மாறி விடு. அகந்தை எண்ணம் மறையும்.* எப்போதும் கடமையில் ஈடுபடு. ஆனால், மனம் மட்டும் கடவுளைச் சிந்திக்கட்டும்.* காலத்தை வீணாக்காதே. கடவுளை முழுமையாக நம்பத் தொடங்கு.* சேற்றில் வாழ்ந்தால் மீனின் உடம்பில் சேறு ஒட்டுவதில்லை. உலகில் வாழ்ந்தாலும் தீய ஆசைகள் மனதில் ஒட்டாமல் பார்த்துக் கொள்.* விவேகம் கொண்டவனுக்கு வாழ்வில் உண்மை எது, பொய் எது என்ற மனத்தெளிவு இருக்கும்.* மனிதனின் உயர்வும், தாழ்வும் அவனுடைய மனதைப் பொறுத்தே உண்டாகிறது.-ராமகிருஷ்ணர்