விவேகத்துடன் செயல்படு
UPDATED : பிப் 12, 2016 | ADDED : பிப் 12, 2016
* கடவுள் ஒருவரே உலகில் சத்தியப் பொருள். மற்ற அனைத்தும் பொருளற்ற பொய்ப் பொருளே. இதை உணர்ந்தவனே விவேகியாவான்.* கடவுளின் திருநாமத்திற்கு சக்தி அதிகம். அதை ஜெபிப்பதற்குரிய தகுதி துாய பக்திக்கு மட்டுமே உண்டு.* பக்தியுள்ளவனாக மாறி விடு. அதே சமயத்தில் மனதில் மூடத்தனத்திற்கு சிறிதும் இடம் அளிக்காதே.* அன்புக்கும், அறிவுக்கும் சமபங்கு அளிக்கும் மனிதனே பாக்கியவான். அவனது மனம் சமநிலை இழப்பதில்லை.-ராமகிருஷ்ணர்